முதல் போட்டியிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தல் - ஆட்டத்தின் போக்கை மாற்றிய நடராஜன்

இன்றைய போட்டியில் அறிமுகமாகியுள்ள நடராஜன் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியர் இருவரும் தங்களது முதல் போட்டியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர்
முதல் போட்டியிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தல் - ஆட்டத்தின் போக்கை மாற்றிய நடராஜன்
x
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வாசிங்டன் சுந்தர் சாய்த்தார்.. இதையடுத்து நிதானமாக ஆடி வந்த லபுசாக்னே, மாத்யூ வேட் கூட்டணியை நடராஜன் உடைத்தார். மாத்யூ வேடை ஆட்டமிழக்க செய்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார் நடராஜன். இதையடுத்து, 108 ரன்கள் எடுத்திருந்த லபுசாக்னேவை வீழ்த்தி, ஆட்டத்தின் போக்கை நடராஜன் மாற்றினார். முன்னதாக, லபுசாக்னே 48வது ரன் இருக்கும் அவரது விக்கெட் கை நழுவியதால், தாமதமாக விக்கெட் விழுந்தது. Next Story

மேலும் செய்திகள்