இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் நடராஜன் சேர்ப்பு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
x
ஆஸ்திரேலியாவில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக, நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில், நடராஜன் சிறப்பாக பந்து வீசி, விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளார். 
 


Next Story

மேலும் செய்திகள்