மும்பை - சென்னை மோதல் : சுவாரஸ்ய தகவல்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான மோதலில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை தற்போது காணலாம்..
மும்பை - சென்னை மோதல் : சுவாரஸ்ய தகவல்கள்
x
கடந்த 8 ஆண்டுகளில் மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் தோல்வியையே தழுவி இருக்கிறது. இது மோசமான சாதனையாகும்.

மும்பை அணி இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய 6 போட்டிகளிலும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ததில்லை.

சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா, தான் விளையாடிய அனைத்து ஐபிஎல் அணிகளிலும் , முதல் விக்கெட்டை மும்பை அணிக்கு எதிராகவே வீழ்த்தி இருக்கிறார். அதாவது பஞ்சாப் , கொல்கத்தா , சென்னை அணிகளுக்காக விளையாடி உள்ள சாவ்லா , தனது முதல் விக்கெட்டை மும்பை அணிக்கு எதிராக வீழ்த்தி இருக்கிறார்.

மும்பை அணியிடம் கடந்த 4 போட்டிகளிலும் தோல்வி கண்ட சென்னை அணி , இந்த வெற்றியின் மூலம் மும்பையின் வீறு நடைக்கு முட்டுக் கட்டை போட்டுள்ளது.

மேலும் சென்னை அணியின் கேப்டனாக தோனி100 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்