தோனியின் எதிர்கால திட்டம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.
தோனியின் எதிர்கால திட்டம் என்ன?
x
தோனியின் எதிர்கால திட்டம் என்ன?



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி  கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் டோனியின் எதிர்கால திட்டம் என்ன? என்பது குறித்து அவரது மானேஜரும், நண்பருமான மிஹிர் திவாகரிடம் கேட்ட போது, தோனியை பார்க்கும் போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்த மாதிரி தெரியவில்லை. ஐ.பி.எல். போட்டியில் விளையாட அவர் மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும், ஊரடங்கு முடிந்ததும் அவர் பயிற்சியை தொடங்குவார் என்றும் தெரிவித்தார்.

204 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து



வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 204 ரன்னில் சுருண்டது. சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கிய போட்டியில், 'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 67 புள்ளி 3 ஓவர்களில் 204 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளும், கேப்ரியல் 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது நாள் முடிவில்18 ஓவர் முடிந்திருந்த போது, 1 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.

லா லிகா கால்பந்து போட்டி - முதலிடத்தை நெருங்கும் பார்சிலோனா அணி



லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி புள்ளி பட்டியலில் ரியல்மாட்ரிட்டை வெகுவாக நெருங்கியுள்ளது. ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, எஸ்பான்யோல் கிளப்பை எதிர்கொண்டது. முடிவில் பார்சிலோனா அணி ஒன்றுக்கு ஜீரோ  என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்தது. 35-வது ஆட்டத்தில் விளையாடிய பார்சிலோனா 23 வெற்றி, 7 டிரா, 5 தோல்வி என்று 76 புள்ளிகளை பெற்று, முதலிடம் வகிக்கும் ரியல்மாட்ரிட்டை (34 ஆட்டத்தில் 77 புள்ளி) நெருங்கியுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்