தோனியை கேலி செய்த தனியார் தொலைக்காட்சி - பதிலடி தந்த சென்னை சூப்பர் கிங்ஸ்..

தோனியை பார்த்து முதியவர் ஒருவர் ஆட முடியுமா என்று கேட்பது போல், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வெளியிட்ட விளம்பரம், சி.எஸ்.கே. ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
தோனியை கேலி செய்த தனியார் தொலைக்காட்சி - பதிலடி தந்த சென்னை சூப்பர் கிங்ஸ்..
x
தோனியை பார்த்து முதியவர் ஒருவர் ஆட முடியுமா என்று கேட்பது போல், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வெளியிட்ட விளம்பரம், சி.எஸ்.கே. ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு தோனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனை கேலி செய்யும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, தோனியை பார்த்து ஆட முடியுமா என்று கேட்பது போல் விளம்பரத்தை வெளியிட்டது. இதற்கு பதிலடி தரும் விதமாக இந்த விளம்பரத்தை தோனி பார்ப்பது போல் ஒரு புகைப்படத்தை சென்னை அணி நிர்வாகம், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தோனி வரும் மார்ச் 1ஆம் தேதி சென்னைக்கு வந்து பயிற்சியை தொடங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகிய நிலையில், இந்த புகைப்படத்தை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்