இந்தியா Vs வங்கதேசம் 2வது டி-20 : இந்தியா அபார வெற்றி - கேப்டன் ரோகித் அசத்தல்

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா Vs வங்கதேசம் 2வது டி-20 : இந்தியா அபார வெற்றி - கேப்டன் ரோகித் அசத்தல்
x
ராஜ்கோட்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார், அதன்படி களமிறங்கிய வங்கதேச வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தனர், அதிகபட்சமாக சஹால் 2 விக்கெட்கள் வீழ்த்தினார், இதனையடுத்து 154 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய வீரர்கள் ரோகித் மற்றும் தவான் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், குறிப்பாக ரோகித் வங்கதேச பந்துவீச்சை சிதறடித்து 85 ரன்கள் விளாசினர், இறுதியில் இந்திய அணி 15 புள்ளி 4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்தது , இந்த வெற்றியின் மூலம் டி - 20 தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்