சச்சின் சாதனையையும் சமன் செய்தார், ரோகித்
பதிவு : ஜூலை 07, 2019, 08:40 AM
மாற்றம் : ஜூலை 07, 2019, 05:03 PM
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாராவின் சாதனையை, அந்த அணிக்கு எதிரான போட்டியிலேயே முறியடித்திருக்கிறார், இந்தியாவின் ஹிட் மேன் ரோகித் சர்மா...
நடப்பு உலக கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்துள்ள ரோகித் சர்மா, ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். குறிப்பாக, கடைசியாக விளையாடடிய 3 போட்டிகளிலும் சதம் விளாசி, ஹாட்ரிக் சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். இதன்மூலம், ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த, இலங்கை வீரர் சங்ககாராவின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் சங்ககாரா 4 சதங்கள் அடித்திருந்தார்,
ஒட்டுமொத்தமாக உலக கோப்பை போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா. இருவரும் தலா ஆறு சதங்கள் அடித்துள்ளனர். அடுத்து வரும் ஆட்டங்களில் சச்சினின் சாதனையையும், ரோகித் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல உலக கோப்பை போட்டிகளில், குறைந்த இன்னிங்சில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார் ரோகித் சர்மா. ஒரே உலக கோப்பை தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்த 4வது வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவையேச் சேரும்... 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.