டி.என்.பி.எல். இன்று - திண்டுக்கல், மதுரை அணிகள் மோதல்

டி.என்.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் அணியும், மதுரை அணியும் மோதுகின்றன.
டி.என்.பி.எல். இன்று - திண்டுக்கல், மதுரை அணிகள் மோதல்
x
நெல்லையில் நடைபெறும் இப்போட்டியில் புத்தும் புது பொலிவுடன் களமிறங்க உள்ள மதுரை அணி, வெற்றியுடன் தொடரை தொடங்க ஆயுத்தமாகி வருகிறது.

அருண் கார்த்திக், நாதன் மற்றும் கடந்த சீசனில் சூப்பர் கில்லீஸ் அணிக்காக களமிறங்கிய தலைவன் சற்குணம் உள்ளிட்டோர் மதுரை அணியில் இடம்பெற்றுள்ளனர்.  திண்டுக்கல் அணியை பொறுத்தவரையில் முதல் போட்டியில் செய்த தவறுகளை சரி செய்து வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாட உள்ள முதல் போட்டிக்கான டிக்கெட்களின் விற்பனை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சூப்பர் கில்லீஸ் அணி, தனது முதல் போட்டியில் வரும் 14ஆம் தேதி திருச்சி அணியுடன் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விலை 50 மற்றும் 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்