"தமிழ் மொழியுடன் ஆங்கிலத்தையும் கற்க வேண்டும்" தமிழகத்தில் இரு மொழிகள் தான்... - அமைச்சர் பொன்முடி

x

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி உள்ளிட்ட நான்கு கல்லூரிகளில் முதுகலை முடித்த ஆயிரத்து 400 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கும் விழா, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் விழுக்காடு 53 சதவீதமாக இருக்கிறது என்றும், இது தேசிய சராசரியை விட மிகவும் அதிகம் என்று கூறினார்.

மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தமிழகத்திற்கு சரிப்பட்டு வராது என்றும், இங்கே 10 , 12-ஆம் வகுப்புக்கு அடுத்ததாக பட்டப்படிப்பு என்ற நிலையே தொடரும் என்றும் கூறினார். தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பொறியியல் படிப்புகளில் மெக்கானிக்கல் , சிவில் பாடப்பிரிவுகளில் தமிழ் வழி பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மற்ற பாடப்பிரிவுகளிலும் தமிழ் வழியை கொண்டுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்