மகளிர் உரிமைத் தொகை: முதலமைச்சர் இன்று ஆலோசனை

x

மகளிர் உரிமைத் தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டங்கள் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கெனவே 5 கட்டங்களாக ஆய்வு கூட்டங்கள் நடத்தியுள்ள நிலையில், மீண்டும் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்கு முதல் கட்டமாக இதுவரை 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் ஆலோசிக்க பட உள்ளது .


Next Story

மேலும் செய்திகள்