"தலைவர் என்று நமக்கு நாமே சொல்லக் கூடாது" - சசிகலா

மயிலாடுதுறையில் அன்பகம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்று, இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதற்கு...
x

"தலைவர் என்று நமக்கு நாமே சொல்லக் கூடாது" - சசிகலா

மயிலாடுதுறையில் அன்பகம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்று, இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதற்கு, வி.கே.சசிகலா வாழ்த்து தெரிவித்தார். மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்திற்கு வந்த சசிகலாவை, மாணவிகள் பாடல்கள் பாடி வரவேற்றனர். பின்னர், கைகளை இழந்த மாணவி லட்சுமிக்கு ஐந்தாயிரம் ரூபாயும், காப்பகத்திற்கு ஒரு லட்ச ரூபாயும் சசிகலா வழங்கினார். தொடர்ந்து காப்பகத்தில் உள்ள அனைத்து சிறுவர் சிறுமிகள் குழந்தைகளையும் சந்தித்து இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, எதிர்க்கட்சி என்று சொல்பவர்கள் உள் கட்சிக்குள்ளே சண்டையிட்டால், பொதுமக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்