"தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி இது தான்.."

x

அதன்படி, நாட்டின் சுதந்திரம், மக்களின் உரிமைகளுக்காக தமிழ் மண்ணில் உயிர் நீத்த வீரர்களின் போற்ற வேண்டும் எனவும், மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்ற பாடுபட வேண்டும் எனவும் உறுதிமொழி வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒற்றுமை, மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவத்தை பேணிக்காக்கும் பொறுப்புள்ள தனி மனிதராகவும், மக்களாட்சி மதச்சார்பின்மை சமூக நீதிப் பாதையில் பயணித்து மக்கள் நல சேவகராகவும் கடமையாற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள பாகுபாட்டை நீக்கி, சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபட வேண்டும் எனவும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்