கட்சி ஆரம்பித்ததும் விஜய்க்கே போன் போட்ட கமல் - ரியல் லைப்பில் `லியோ' கிளைமேக்ஸ்

x

அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய்க்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், வெளிநாடு சென்றுள்ள கமல்ஹாசன், தொலைபேசி மூலமாக விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விஜய் எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026 தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்