சில மணி நேரங்களில் MPஐ தட்டி தூக்கி... பகுஜன் சமாஜ்-க்கு ஷாக் கொடுத்த பாஜக

x

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரித்தேஷ் பாண்டே உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் மற்றும் மாநில பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 2019 தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதியும் இணைந்து போட்டியிட்ட போது, ​​பாண்டே அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் முகுத் பிஹாரியை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இம்முறை, பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்த நிலையில், காங்கிரஸுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில், பகுஜன் சமாஜில் இருந்து விலகி ரித்தேஷ் பாண்டே பாஜகவில் இணைந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்