திருச்சி வந்தடைந்த இருசக்கர வாகன பேரணி - அமைச்சர் ஓட்டி உற்சாகம்

x

திருச்சி, பால்பண்ணையில் திமுகவின் இருசக்கர வாகன பேரணியை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தானும் அவர்களுடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டினார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில், தொடங்கி வைத்த இருசக்கர வாகன பேரணி, திருச்சி திருவெறும்பூரை வந்தடைந்தது. அவர்களை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பேரணியை திருச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தானும் இருசக்கர வாகனத்தை ஓட்டி, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்