"பா.ஜ.க., அ.தி.மு.க.க்கு".. தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் சுலைமான் திட்டவட்டம்

x

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவை ஆதரிக்கக் கூடாது என்பதில் தமிழக முஸ்லிம்கள் தெளிவாக இருப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் சுலைமான் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் வரதட்சணை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில், வரதட்சணை போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் சுலைமான், சிறுபான்மையினருக்கு எதிராகவே பாஜக இருப்பதாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்