"குவிந்த மகளிர் கூட்டம்" - மக்களோடு மக்களாக கலந்த வேட்பாளர் - ஆணி அடித்தார் போல் ஒலித்த வாக்குறுதி

x

"குவிந்த மகளிர் கூட்டம்" - மக்களோடு மக்களாக கலந்த வேட்பாளர் - ஆணி அடித்தார் போல் ஒலித்த வாக்குறுதி

கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் நான்கு ரோடு, செல்லாண்டிபாளையம், திருமாநிலையூர், காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராயனூர் நான்கு ரோடு பகுதியில், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த அவர், 400 இடங்களுக்கு மேல் வென்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்றும், கரூர் தொகுதியில் வெற்றி பெற்றால், தொகுதி மக்களின் கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்றுவார் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்