"தலைமை நீதிபதிக்கு தெரிவிக்காமல்.." - KKSSR வழக்கு... உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுதலைக்கு எதிராக தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தலைமை நீதிபதியின் முன் அனுமதி பெற்றாரா? என உச்ச நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது...

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது பதிவு செய்த சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து, அவரை விசாரணை நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் விடுவித்தது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து ஆகஸ்டில் வழக்கு பதிவு செய்தது. இந்த விசாரணைக்கு இடைக்கால தடை கோரி,

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதிக்கு தெரிவிக்காமலேயே தனி நீதிபதி வழக்குப்பதிவு செய்து குழப்பம் விளைவிப்பதாக அமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை பதிவு செய்த உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதியிடம் தனி நீதிபதி முன் அனுமதி பெற்றாரா என பிப்ரவரி 5ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்