BREAKING || இன்று தமிழக பட்ஜெட் - காலையிலேயே ஆளுநரின் திடீர் டெல்லி பயணம்

x

தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி, இன்று காலை 6:00 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் கவர்னரின் செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர் ஆகியோரும் சென்றுள்ளனர். 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள கவர்னர் ரவி வரும் 22ந் தேதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் உரையை முழுமையாக படிக்காமல் பிரச்சனை ஏற்பட்ட பின்பு, கோவைக்கு 3 நாள் பயணமாக சென்று தங்கியிருந்த கவர்னர் ரவி, நேற்று மாலை தான் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென, நான்கு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கும் இந்த நிலையில், கவர்னரின் இந்த திடீர் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்