ராகுல் காந்தி மீது முதல்வர் எடுத்த ஆக்சன்

x

அசாமில் கூட்டத்தை தூண்டியதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில டி.ஜி.பி-க்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அசாம் தலைநகர் கவுஹாத்திக்குள் ராகுல் காந்தியின் யாத்திரை நுழைய தடை விதிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை வழியாக யாத்திரையை தொடர அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் யாத்திரையை கவுஹாத்திக்குள் முன்னேறவிடாமல் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். இருப்பினும் தடுப்புகளை மீறி காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் முன்னேற முயன்றனர். அப்போது, காவல்துறையினருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ராகுல் காந்தி தனது வாகனத்தின் மீது நின்றிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அசாம் முதல்வர் ஹிமாந்த ஷர்மா, இது அசாம் மாநிலத்தின் கலாச்சாரம் அல்ல என்றும், இது அமைதியை விரும்பும் மாநிலம் என்றும் குறிப்பிட்டார். கூட்டத்தை தூண்டியதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்