"நாட்டின் பொருளாதாரத்தையும், முன்னேற்றத்தையும் சிறையில் தள்ளுவதா?" - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

x

எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் துக்ளக் சட்டங்கள் இயற்றுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓட்டுநர்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் முன்னேற்றத்தின் சக்கரமாக திகழ்வதாக கூறியுள்ளார். லட்சக்கணக்கான மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்கி சிறையில் தள்ளுவது மற்றும் திவால் ஆக்க‌க் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். முறையான ஆலோசனை செய்யாமல் துக்ளக் சட்டங்கள் இயற்றுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்