விஜயகாந்தை நலம் விசாரித்த பிரதமர் மோடி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்....
x

விஜயகாந்தை நலம் விசாரித்த பிரதமர் மோடி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். நீரிழிவு நோயால் அவதிப்பட்ட விஜயகாந்திற்கு அண்மையில் கால் விரல்கள் அகற்றப்பட்டன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது நலனை பலரும் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்திடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்