சூப்பர் ஐடியா கொடுத்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

x

திறமையான இளையோரை வழக்கறிஞர் முதல் நீதிபதியாக தேர்ந்தெடுத்து நீதித்துறைக்கு கொண்டு வர அகில இந்திய நீதித்துறை பணி ஏற்படுத்தலாம் என, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு யோசனை தெரிவித்துள்ளார்.அரசியல் சாசன தின விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் சிலையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், திறமையான இளையோரை நீதித்துறைக்கு கொண்டு வர அகில இந்திய நீதித்துறை பணி ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டார். நீதித்துறையை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவை நீதித்துறை இடமே விட்டுவிடுவதாகவும், அரசமைப்பு சாசனத்தின் அடிப்படை விழுமியமாக ஜனநாயகம் திகழ்வதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். மக்களாட்சியின் அவசியத்தை விடுதலை போராட்டத்தின்போது தான் நாம் புரிந்து கொண்டதாகவும் திரெளபதி முர்மு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்