பிரஜ்வல் ரேவன்னா ஆபாச வீடியோ விவகாரம்... போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்கள்
அக்காட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஒருவர் பின் ஒருவராக, பிரஜ்வல் ரேவண்ணாவையும் அவரது தந்தை ரேவண்ணாவையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என நேரடியாகவும், முகநூல் பக்கம் மூலமாகவும் தங்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வருகின்றனர்.இதுதொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் சம்ருத்தி மஞ்சுநாத் தனது முகநூல் பக்கத்தில், மக்கள் முன்னிலையில் கட்சியை தலைகுனிய வைத்தவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஊடக நிறுவனமும் ஹாசன் மாவட்டத்தின் காணொளிகளைப் பற்றியே பேசுகின்றன என்றும், ஊடகங்களின் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை, என்று கூறியுள்ளார். தேவகவுடாவும், குமாரசுவாமியும் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும், இது சரியான நேரம் என்றும் பதிவிட்டுள்ளார்.
Next Story