உதயநிதி ஸ்டாலின் குறித்து பா.ரஞ்சித் பரபரப்பு ட்விட் | Pa Ranjith | Udhayanidhi

x

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜாதி மற்றும் பாலின அடிப்படையில் நடைபெறும் மனிதத்தன்மையற்ற செயல்களுக்கு ஆணிவேராக சனாதன தர்மம் விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார். சட்டமேதை அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், தந்தை பெரியார், மகாத்மா புலே, ரவிதாஸ் ஆகியோர் சனாதனத்தை எதிர்த்தனர் என்றும் கூறியுள்ளார். சமூக நீதியுள்ள சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு தனது ஆதவுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த பதிவில் பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்