`ஒரே நாடு ஒரே தேர்தல்' எதிராக தீர்மானம் - அதிர போகும் சட்டமன்றம்

x

இந்த தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்.

"ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும், அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதால், இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட பறந்து விரிந்த நாட்டில், உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும், நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள், பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதால் இதை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

-


Next Story

மேலும் செய்திகள்