'ஒரு வார்த்தை' - பாஜகவை வெளுத்து வாங்கிய முரசொலி

x

10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் சாதனைகள் என சொல்வதற்கு ஒன்றுமில்லாததால், எதிர்க்கட்சிகளின் கருத்துகளை திரித்துக்கூறி வருவதாக தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.முரசொலி நாளேட்டில் இன்று வெளியான தலையங்க கட்டுரையில், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர், தாங்கள் எழுதியதற்காக, பேசியதற்காக கைதாகி சிறை இருந்திருக்கிறார்களே தவிர, வன்முறைகளில் அல்ல என குறிப்பிட்டுள்ளது. இனப்படுகொலையின் வரலாறு 2002 குஜராத்தில் நடந்தது - மசூதியை கடப்பாரையைக் கொண்டு தகர்த்தது யார் ? - குடியுரிமை சட்டத்தின் நோக்கமும், பொது சிவில் சட்டத்தின் நோக்கமும் இனச் சுத்திகரிப்பு அல்லாமல் வேறென்ன? என கேள்வி எழுப்பியுள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியில் சொல்லிக் கொள்வதற்கு எந்த சாதனையும் செய்யாத பா.ஜ.க, எதிர்க்கட்சிகள் சொல்வதில் இருந்து ஏதாவது ஒரு வார்த்தையை எடுத்து திரித்து, அதன் மூலமாக திசை திருப்ப பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. சனாதனத்தை ஒழித்தல் என்பதை இன அழிப்பு என்று அவர்களாக, அவர்களது புத்திக்கு ஏற்ப திரித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளது. ஓட்டு வாங்க பாஜகவிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை, அதனால் பொய்யை எடுத்து வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்