"பிரதமராக இல்லை..இந்துவாக வந்துள்ளேன்.." - இங்கிலாந்து மண்ணில் பேசிய ரிஷி சுனக்

x

தான் ஒரு இந்துவாக இருப்பதற்குப் பெருமை கொள்வதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்...இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆன்மீக சொற்பொழிவாளர் முராரி பாபுவின் ராமர் கதை சொற்பொழிவு நடந்தது. இதில் ரிஷி சுனக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தான் ஒரு பிரதமராக இங்கு வரவில்லை என்றும், இந்துவாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மத நம்பிக்கை என்பது தனிப்பட்டது என தெரிவித்த ரிஷி சுனக், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அது தன்னை வழிநடத்துவதாகவும், தான் பிரதமராக இருப்பதற்குத் தேவையான துணிச்சல், வலிமையை தனது மத நம்பிக்கை தருவதாகவும் தெரிவித்துள்ளார். முராரி பாபுவின் பின்னால் தங்க அனுமன் சிலை இருப்பதைப் போல், தன் மேஜையில் தங்க விநாயகர் சிலை இருப்பதை பெருமையாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார். பிரிட்டன் குடிமகனாகவும், ஒரு இந்துவாகவும் இருப்பதற்குப் பெருமை கொள்வதாகத் தெரிவித்த ரிஷி சுனக், ராமர் எப்போதும் தனது வழிகாட்டியாகத் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் ரிஷி சுனக் தன் உரையைத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் ஜெய் ஸ்ரீராம் என கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்