நாளை வேட்பு மனு தாக்கல்... பிரதமரை சந்தித்த திரௌபதி முர்மு

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரெளபதி முர்மு, டெல்லியில் பிரதமர் மோடி சந்தித்தார்...
x

நாளை வேட்பு மனு தாக்கல்... பிரதமரை சந்தித்த திரௌபதி முர்மு

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரெளபதி முர்மு, டெல்லியில் பிரதமர் மோடி சந்தித்தார். ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதை முன்னிட்டு ஒடிசாவில் இருந்து இன்று டெல்லி வந்தார்.விமான நிலையம் வந்த அவரை, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, அடிப்படை பிரச்சனைகள் மீதான அவரது புரிதல், இந்தியாவின் வளர்ச்சி குறித்த அவரது தொலைநோக்கு பார்வை போன்றவை அளப்பரியது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்