"பிரதமர் மோடி இன்னும்.." - அமித் ஷா போட்ட ட்வீட்

x

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 2024 தேர்தலில் பிரதமர் மோடி இன்னும் அதிக பெரும்பான்மையுடன் திரும்புவார் என்பதில் மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில், பாரதம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த பாரதமாக உருவாக்க பிரதமர் நிரணயித்துள்ள இலக்கை அடைய மக்கள் தயாராக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்