Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-02-2024) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-02-2024) | Morning Headlines | Thanthi TV
x
  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.. ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து, முறைப்படி அழைப்பு விடுத்தார் சபாநாயகர் அப்பாவு...
  • அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்... 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்...முழுமையான பட்ஜெட்டை, இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...
  • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன், த.மா.கா. தலைவர் ஜிகே வாசன் சந்திப்பு... நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்...
  • "அதிமுகவுடன் கூட்டணி அமைக்க யாரும் விரும்பவில்லை..." - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்...
  • தி.மு.க. அணியை எதிர்த்து போட்டியிடும் சக்திமிக்க கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை... விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்...
  • தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், வரும் 7ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
  • நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்...
  • "தமிழக வெற்றி கழகம்" என்ற அரசியல் கட்சி தொடங்கினார், நடிகர் விஜய்.... தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பெயர் பதிவு செய்யப்பட்ட நிலையில், சமூக வலைதள கணக்கும் தொடக்கம்.....
  • இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா ஆறு விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள்... சதம் விளாசினார் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால்...

Next Story

மேலும் செய்திகள்