"பெண்கள் கெஞ்சியும் கண்டு கொள்ளாத அரசு"மோடி வேதனை

x

மேற்குவங்கத்தில் மத்திய அரசின் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி அது தங்களின் திட்டம் என திரிணாமூல் காங்கிரஸ் அழைப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்

மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகரில், சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியில் மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதாகவும், சந்தேஷ்காளியில் நீதிக்காக பெண்கள் கையேந்தி கெஞ்சியபோதும் அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேற்குவங்கம் தொடர்ந்து ஏழ்மையாகவே இருக்க வேண்டும் என அம்மாநில அரசு கருதுவதாகவும் தெரிவித்தார். மேற்குவங்கத்தில் வேலைவாய்ப்பு, முதலீட்டிற்கான வாய்ப்புகளை பா.ஜ.க வருங்காலத்தில் உருவாக்கும் என தெரிவித்த பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் 42 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெறும் வகையில் மக்கள் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்