புதிய பள்ளி, கல்லூரி கட்டடங்களை திறந்து வைத்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

x

தென்காசி, ராமநாதபுரம், தருமபுரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 16 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி விடுதி கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில்இருந்து காணொலிக்காட்சி வாயிலாக அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார். அதேபோல் மதுரை, தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் 7 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு பணிகள் முடிவுற்ற 5 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளையும் அவர் திறந்து வைத்தார். மேலும், பணிகாலத்தில் மறைந்த 16 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்