"முல்லா. மதரஸா.. மாஃபியா..." "ராகுல், மம்தாவுக்கு தான் பயம்..." மேடையில் அமித்ஷா சூளுரை

x

மேற்கு வங்க மாநிலம் சேராம்பூரில் பிரசாரம் செய்த அமித்ஷா, இந்தியா கூட்டணி ஆட்சியில் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால் மோடி ஆட்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கிறது என்றார். முன்னதாக காஷ்மீரில் சுதந்திர கோஷம், கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது, மோடி ஆட்சியில் இதெல்லாம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கிறது என்றார். ராகுல், மம்தா பானர்ஜிக்கு வேண்டும் என்றால் பயம் இருக்கட்டும் என்றவர், நாங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என சூளுரைத்தார். மேற்கு வங்கத்தில் மா, மாதி, மனுஷ் கோஷத்தோடு ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜியின் கவனம் எல்லாம், முல்லா. மதரஸா.. மாஃபியா என மாறிவிட்டது என அமித்ஷா விமர்சித்தார். மொஹரம் ஊர்வலத்திற்கு எந்தஒரு தடையும் கிடையாது, ஆனால் துர்கா, காளி பூஜை ஊர்வலத்திற்கு எல்லாம் சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்படுகிறது, இது தொடர வேண்டுமா என கேள்வியை எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்