"வட இந்தியாவில் கடைசி 7 நாள் போதும் தேர்தல் ரிசல்டையே மாற்றும்... தென் இந்தியாவில் தலைகீழ் நிலை

x
  • "வட இந்தியாவில் கடைசி 7 நாள் போதும் தேர்தல் ரிசல்டையே மாற்றும் உக்கிர சக்தி - தென் இந்தியாவில் அப்படியே தலைகீழ் நிலை" இந்திய மக்களின் பல்ஸ் இதுதான்
  • நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமடையும் சூழலில்... பிரசாரங்கள் மக்கள் வாக்களிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துமா...? என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு
  • இந்தியாவில் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. தீவிரம் என்பதைவிட
  • உக்கிரம் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு தலைவர்களின் வசைபாடல் அமைந்து வருகிறது.
  • மதம் குறித்து பேச்சு, மொழி குறித்து பேச்சு.. தனிமனித தாக்குதல் என தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
  • கடைசி நேரத்தில் மக்களை கவர.. தலைவர்கள் வீசும் வார்த்தைகள் பயனளிக்குமா..? என்றால் மக்கள்தான் முடிவெடுக்கிறார்கள் என்றார் பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்...
  • ஆனால்.. வரம்புமீறிய பேச்சுக்களை எல்லாம் வாக்காளர்கள் ஏற்கமாட்டார்கள் என்றார் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன்..
  • மறுபுறம் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள், கட்சிகள் ஆட்சி காலங்களில் இருந்த வளர்ச்சியை ஆராய்ந்து யாருக்கு வாக்கு என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கிறார்கள், கடைசிநேர பிரசாரம் அவர்கள் ஒரு முடிவை எடுப்பதற்கான உந்துதலாக வேண்டுமானால் இருக்கலாம் என்றார் கருத்துக்கணிப்பு ஆய்வாளர் அருண் கிருஷ்ணமூர்த்தி...
  • தமிழகம்.. ஆந்திரா.. போன்ற தென் மாநிலங்களில் யாருக்கு வாக்கு என்பதை வாக்காளர்கள் முன்கூட்டியே தீர்மானித்து விடுகிறார்கள்... அதன்பிற்கு வேட்பாளர் யார்...? பிரசாரம் எப்படி என்பதை சிந்தித்து வாக்களிப்பதாக ஆய்வுகளை குறிப்பிடும் கோட்டீஸ்வரன், வட மாநிலங்களில் கடைசி நேர உக்கிரமான பிரசாரங்கள் பயனளிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
  • நேர்மறை.. எதிர்மறை என இரு பிரசாரங்களுமே வாக்குகளை பெற்று கொடுத்திருப்பதாக சொல்லும் கோட்டீஸ்வரன்.... எல்லை மீறும் பிரசாரங்களுக்கு தேர்தல் ஆணையம் கடிவாளமிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறார்

Next Story

மேலும் செய்திகள்