மோடியுடன் ஒப்பிட்டு ராகுலை தாக்கிய பினராயி விஜயன்.. இந்தியா கூட்டணியில் ஹீட்

x

மோடியுடன் ஒப்பிட்டு ராகுலை தாக்கிய பினராயி விஜயன்.. இந்தியா கூட்டணியில் ஹீட்

#kerala #PinarayiVijayan #thanthitv #congress #bjp #rahulgandhi #pmmodi

கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பே இல்லை என்ற நிலையிலும், கேரள அரசின் சாதனைகளை பிரதமர் மோடி, பொய்களால் மூடி மறைக்க முயல்கிறார் என்று, முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவில் இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில், காசர்கோட்டில் முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது, கேரளாவுக்கு எதிராகப் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் ஒரே குரல் எழுப்புவதாக குற்றம்சாட்டினார்.

நிதி ஆயோக்கின் பொறுப்பில் இருந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்கிறார் என்றும் கூறினார். கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து, கேரளாவை அவமதித்து பிரதமர் மோடி பொய்களை கூறி வருகிறார் என்று விமர்சித்தார்


Next Story

மேலும் செய்திகள்