"கம்யூ., தலைவர்களை கொல்ல சதி..?" - "ரயிலில் துப்பாக்கி சூடு.."- கேரள காங்., தலைவர் விடுவிப்பு

x

1995இல், கேரளாவின் கம்யூனிஸ்ட் தலைவா்களை கொலை

செய்ய திட்டம் தீட்டியதாக, கேரள மாநில காங்கிரஸ் தலைவா்

கே.சுதாகரன் மற்றும் ராஜீவ் ஆகியோா் மீது இடதுசாரிகள்

கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தற்போது உள்ள

இ.பி.ஜெயராஜன் புகார் அளித்திருந்தார். ஆந்திராவில் உள்ள

சிராலா பகுதியில் ரயிலில் பயணித்த போது ஒருவா் தன்னை

துப்பாக்கியால் சுட்டதில் தான் காயமடைந்ததாகவும் அவா்

புகாா் மனுவில் குறிப்பிட்டிருந்தாா். இந்த வழக்கில் இருந்து

விடுதலை செய்யக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில்

சுதாகரன் மற்றும் ராஜீவ் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்ற நீதிபதி ஜியாத்

ரஹ்மான் சுதாகரன் மற்றும் ராஜீவ் ஆகியோா் மீது ஏற்கெனவே

ஆந்திரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு

விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி,

கேரளா அரசு தொடுத்த வழக்கில் இருந்து அவர்களை

விடுவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்