கங்கனாவுக்கு ஆதரவாக கல்வீச்சு... வெடித்த பாஜக-காங்., மோதல் - கலவர களமாக மாறிய இமாச்சல பிரதேசம்

x

இமாச்சல் பிரதேசத்தில், பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா ரனாவத்துக்கு, காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி காட்டினர். லாஹவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தின் காசா பகுதிக்கு, பாஜக மண்டி வேட்பாளர் கங்கனா ரனாவத் இன்று வருகை தந்தார். இதையறிந்த காங்கிரஸ் கட்சியினர், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி முழக்கமிட்டனர். அப்போது, பாஜக - காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் நீடித்தது. பாஜகவினர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், அக்கட்சி தொண்டர் ஒருவர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. காசாவில் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் அனுமதி வாங்கி இருந்த நிலையில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெய்ராம் தாக்கூர் அதற்கு

முட்டுக்கட்டை போட்டு, அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, இதையடுத்து கங்கனா ரனாவத் மற்றும் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர், காசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்