புருவம் உயர செய்த ஜெகனின் சொத்து மதிப்பு.. நீங்க Guess-யே பண்ண முடியாத `கோடி'

x

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தன்னுடைய சொத்து மதிப்பு 529 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி, சொத்து கணக்கை காட்டியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது, 375 கோடியே 20 லட்சம் ரூபாய் என கணக்கு காட்டியிருந்த நிலையில், தற்போது 529 கோடியே 50 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ளார். இது, 41 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டு மட்டும் 58 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது மனைவி பார்வதி ரெட்டிக்கு 176 கோடி ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களும், 6.4 கிலோ தங்கமும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்