`சின்ன பையன்' - பாஜகவுடன் சேர்ந்துகொண்டு இந்தியா கூட்டணியை வெறுப்பேற்றும் நிதிஷ்குமார்

x

2022ல் பாஜக உடனான கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தார். நிதிஷ்குமார் முதல்வராகவும் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர். இந்த நிலையில், நிதிஷ்குமார் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இந்த சூழலில் இருவரும் ஒன்றிணைந்து ஆட்சி செய்த போது பீகாரில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகளை இருவருமே உரிமை கொண்டாடி வருகின்றனர்... ராஷ்டிரிய ஜனதா தளம் தேஜஸ்வியின் 18 சாதனைகளை பட்டியலிட்டுள்ளது... ஆனால் இவை அனைத்தையும் தான் கொண்டு வந்த நிலையில், பெயரை அவர்கள் எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டிய நிதிஷ்குமார், தேஜஸ்வி ஒன்றுமறியா சிறுவன் என்று அழைத்தார்...


Next Story

மேலும் செய்திகள்