ஓட்டம் பிடிக்கும் காங்., தலைகள்... காங்கிரஸ் vs சிவசேனா இடையே சிக்கல்- I.N.D.I.A.-க்கு அடி மேல் அடி

x

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்களும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு 15 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களும் முடிவாகியுள்ளன. மீதமுள்ள இடங்களில் தொகுதிப் பங்கீடு முடிவடையாமல் உள்ளது. இதுதொடர்பாக வரும் 27-ம் தேதி அடுத்தக்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் உடன்பாடு எட்டப்படாத இடங்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராம்டெக், ஹிங்கோலி, ஜல்னா, மும்பை வடமேற்கு, மும்பை தெற்கு-மத்தியம், ஷீரடி, பிவாண்டி மற்றும் வார்தா ஆகிய 8 இடங்களை காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளுமே கேட்பதாக கூறப்படுகிறது. 23 இடங்களில் போட்டியிட சிவசேனா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்