புது வார்த்தையை இறக்குமதி செய்த மோடி.. கொழுந்துவிட்டு எரியும் தேர்தல் களம்

x

குஜராத் மாநிலத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் பிரதமர் மோடி பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் இந்தியாவில் அழிவதை பார்த்து பாகிஸ்தான் அழுகிறது என்றார். காங்கிரசுக்காக பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இளவரசரை பிரதமராக்க பாகிஸ்தான் துடிக்கிறது எனவும் காங்கிரசுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டணி முற்றிலும் அம்பலமாகிவிட்டது என சாடினார். பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி உசேன் ராகுல் காந்தியை பாராட்டியதை பாஜக விமர்சித்து வரும் வேளையில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். இந்திய கூட்டணி இஸ்லாமியர்களை ஓட்டு ஜிகாத் நடத்த கேட்கிறது என விமர்சித்த பிரதமர் மோடி, லவ் ஜிகாத், நில ஜிகாத்தை தொடர்ந்து இப்போது ஓட்டு ஜிகாத் தொடங்கிவிட்டது என காட்டமாக விமர்சித்தார்.

உத்தரபிரதேசத்தில் பிரசாரம் செய்த சமாஜ்வாடி நிர்வாகி மரியா அலம் கான், ஓட்டு ஜிகாத் நடத்தினால் மட்டுமே மத்தியில் இருக்கும் கட்சியை ஆட்சியை விட்டு அகற்ற முடியும் என கூறியிருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்