முன்னாள் அமைச்சரின் உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை - உயர்நீதிமன்றம் அதிரடி

x

சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991 முதல் 96 வரையிலான அதிமுக ஆட்சியில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த இந்திர குமாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், வெங்கடகிருஷ்ணன். இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 73 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து, 2012ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக 700 சதவீதம் சொத்து சேர்த்தது நிரூபணமாகியுள்ளதாக கூறி, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், வெங்கடகிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டுகளும், மஞ்சுளாவுக்கு 18 மாதங்களும் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள், தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்