வீடு வீடாக பிரச்சாரம் செய்த வேட்பாளர்.. சட்டென வீட்டிற்குள் சென்று சிறுமி கொண்டுவந்த அந்த பொருள்.

x

ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில், தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பொஜ்ஜல சுதிர் ரெட்டி, 19-ஆவது வார்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வீட்டுக்கு வீடு பொஜ்ஜால‌ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும், மக்கள் வருமானம் ஈட்டுவதற்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறினார். பிரச்சாரத்தின்போது, ரத்ன மௌனிகா என்ற 10 வயது சிறுமி தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை பொஜ்ஜல சுதிர் ரெட்டியிடம் கொடுத்து, அவருடைய வெற்றிக்கு உதவுவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்