சிக்னல் கொடுத்த திமுக தலைமை... ரெடியாகும் மாஸ்டர் பிளான்..! களமிறங்கும் `வாரியர்ஸ்' படை

x

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் பரப்புரை தொடர்பான பட்டியல் விரைவில் வெளியாகும் என கட்சியின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. Card-2 திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம், மக்களவை தேர்தல் பரப்புரை மேற்கொள்வது, Card-3 எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பான பட்ஜெட் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Card-4 கூட்டத்தில் பேசிய திமுக நிர்வாகி வாகை சந்திரசேகர், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காண நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் திரை கலைஞர்கள் பட்டியல் தயாராகி வருவதாகவும், Card-5 திமுக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்