தேர்தல் திருவிழா போட்டி போட்டு நாமினேஷன் செய்த நட்சத்திர வேட்பாளர்கள்

x

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்...

அதன்படி, திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்க பாண்டியன், துணை ஆணையர் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்...

மேலும், வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்...

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்