"பயிரிட்டு கொண்டே இருந்தால் நீர்விட்டுக் கொண்டே இருக்க முடியாது" - பேரவையில் அமைச்சர் துரைமுருகன்

x

மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர் குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் போதிய நீர் இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும், மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு உரிய நீர் திறந்து விட வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். மணியன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ள போதிலும், 3 டி.எம்.சி பாசனத்திற்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். விவசாயிகள் பயிரிட்டு கொண்டே இருந்தால் நீர் விட்டுக்கொண்டே இருக்க முடியாது.. விரைவில் மழை வரும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் துரைமுருகன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்