"ஆம் ஆத்மிக்கு எதிராக களமிறங்கும் காங்கிரஸ்" - ஜெயராம் ரமேஷ் பரபரப்பு தகவல்

x

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மாநில அளவில் சில கட்சிகளுக்கு எதிராக போட்டியிடுவதால், தொகுதி பங்கீட்டில் சிரமம் இருப்பதாக கூறினார்.

டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக போட்டியிடுகிறோம் என்றும், ஆனால் தேசிய அளவில் ஒன்றுபட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

திமுக,சிவசேனா மற்றும் சமாஜ்வாடி கட்சியுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில்

காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது என்றும் கூறினார்.இங்கு அதிக எண்ணிக்கையிலான இடங்கள், ஆம் ஆத்மி கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் சில நாட்களுக்குள், தொகுதி பங்கீடு இறுதி வடிவம் கொடுக்கப்படும் என, ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்