முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா - கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு

x

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கொளத்தூரில் கால்பந்து போட்டி நடைபெற்றது. திரு.வி.க. நகர் விளையாட்டு மைதானத்தில் கால்பந்து போட்டியினை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் ஏராளமான கால்பந்து வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்