மாலை 6.30 மணிக்கு.. எடுக்கப்போகும் முக்கிய முடிவு என்ன? - முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

x

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக தொழில்துறை சார்பில் வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் பல புதிய தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டும் தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க அனைத்து அமைச்சருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் நடைபெறும் கூட்டத்தில், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.அதோடு, அமைச்சர்களின் செயல்பாடு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை‌ திட்டத்துக்கான புதிய பயனாளிகளுக்கு தேர்வு மற்றும் நிதி தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்